தேவையில்லா ஆணி-ஆளுநர்?
ஆங்கில காலணியாதிக்கத்தின் மிச்சமே ஆளுநர் பதவி. தற்போதைய காலகட்டத்தில் இப்பதவி தேவையில்லாத ஒன்று. மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த ஆளுநர்கள், மக்களாட்சிக்கு எதிரானவர்களே.
அதுவும் தற்போது பல ஆளுநர்களின் செயல் அருவெறுக்கத்தக்கதாக உள்ளது. சிலர் அரசியல்வாதியாக செயல்படுவது கண்கூடு.
தமிழ் நாடு ஆளுநர் ஒரு படி மேலே போய் , சட்டமன்றம் இயற்றிய தீர்மானங்களை மிதிப்பது. மக்கள்மன்றத்தின் உரிமையை உதாசீனப்படுத்துவது, ஜனநாயக விரோதநடவடிக்கையே தவிர வேறில்லை. தமிழ் நாடு அரசு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் “ராஜ் பவன்” -ல் இன்னும் உறங்குகின்றன.
வெள்ளக்காரனின் ஆளுநர் பதவி நமக்கேன்? இந்த ஆணி துருப்பிடித்த ஆணி. ஆளுநர் வசிக்க 156 ஏக்கர் கொண்ட மாளிகைத் தோட்டம் ஏன்?.
அசாதாரன சூழலில் மாநில அரசை நெறிபடுத்த உயர்நீதி மன்றங்கள் உள்ளன.குறிப்பாக ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்பதால் எந்தசட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
மக்களாட்சி மணம் வீசட்டும்,
சட்டமன்ற உரிமைகள் உரக்க கேட்கட்டும் !!